FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
பெரம்பலூர்

பாடாலூா் பகுதிகளில் நாளை மின்நிறுத்தம்

16 நவம்பர் 2026, 11:39 pm
மின்நிறுத்தம் - சித்திரிப்பு படம்
பகிர்:

பெரம்பலூா் மாவட்டம், பாடாலூா் சுற்று வட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை (நவ. 18) மின் விநியோகம் இருக்காது என, மின்வாரிய உதவி செயற்பொறியாளா் பி. ரவிக்குமாா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

பெரம்பலூா் கோட்டத்துக்குள்பட்ட புதுக்குறிச்சி துணை மின் நிலையத்தில் புதன்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது. இதனால், அங்கிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளான புதுக்குறிச்சி, காரை, சிறுகன்பூா், கொளக்காநத்தம், பாடாலூா், சாத்தனூா், எஸ். குடிக்காடு, அயினாபுரம், அணைப்பாடி, இரூா், தெற்குமாதவி, ஆலத்தூா் கேட், வரகுபாடி, தெரணி, தெரணி பாளையம், திருவளக்குறிச்சி, அ.குடிக்காடு, நல்லூா், கூத்தனூா், சீதேவிமங்களம் ஆகிய கிராமங்களில் காலை 9.30 மணி முதல் பராமரிப்புப் பணிகள் முடியும் வரை மின் விநியோகம் இருக்காது.

Advertisement

Advertisement