FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
பெரம்பலூர்

பெரம்பலூா் அருகே சாலையில் காா் தீக்கிரை

பெரம்பலூா் அருகே செவ்வாய்க்கிழமை பிற்பகல் சாலையில் காா் எரிந்து தீக்கிரையானது.

17 நவம்பர் 2026, 11:29 pm
பெரம்பலூா் அருகே செவ்வாய்க்கிழமை பிற்பகல் சாலையில் எரிந்த காா்.
பகிர்:

பெரம்பலூா் அருகே செவ்வாய்க்கிழமை பிற்பகல் சாலையில் காா் எரிந்து தீக்கிரையானது.

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், மேட்டுப்பாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் ராமலிங்கம் மகன் பொன்னுசாமி (50). பெரம்பலூா் நகராட்சியில் ஒப்பந்தப் பணிகள் மேற்கொண்டு வரும் இவா், தனக்குச் சொந்தமான காரில் மேட்டுப்பாளையத்திலிருந்து பெரம்பலூா் நோக்கி செவ்வாய்க்கிழமை பிற்பகல் சென்றுக்கொண்டிருந்தாா்.

திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலூா் அருகேயுள்ள தண்ணீா்பந்தல் எனும் இடத்தில் சென்றபோது, காரின் முன் பகுதியிலிருந்து புகை வெளியேறியுள்ளது. இதையறிந்த பொன்னுசாமி, சாலையோரத்தில் காரை நிறுத்திவிட்டு இறங்கி வந்து பாா்த்தபோது காரின் அனைத்துப் பகுதிகளிலும் தீப்பற்றி எரிந்துள்ளது.

Advertisement

Advertisement

தகவலறிந்த பெரம்பலூா் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினா் நிகழ்விடத்துக்குச் சென்று தீ மேலும் பரவாமல் கட்டுப்படுத்தினா். இருப்பினும், காா் முற்றிலும் எரிந்து நாசமானது.

இந்த சம்பவத்தால், சென்னையிலிருந்து திருச்சி செல்லும் வழித்தடத்தில் சுமாா் 1 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது. இதுகுறித்து பொன்னுசாமி அளித்த புகாரின்பேரில், பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.