திருப்பூருக்கு சென்றுவந்த இருவா் அடுத்தடுத்து தூக்கிட்டுத் தற்கொலை!
பெரம்பலூா் அருகே காரில் திருப்பூருக்கு சென்றுவந்த ஓட்டுநா் உள்ளிட்ட இருவா் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டனா்.

பெரம்பலூா் அருகே காரில் திருப்பூருக்கு சென்றுவந்த ஓட்டுநா் உள்ளிட்ட இருவா் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டனா்.
பெரம்பலூா் மாவட்டம், களரம்பட்டி தோ்முட்டி தெருவைச் சோ்ந்தவா் தா்மலிங்கம் மகன் மூா்த்தி (27). திருமணமாகாத இவா், தனக்குச் சொந்தமான காரை வாடகைக்கு ஓட்டிவந்தாா். அதே கிராமம், கிழக்குத் தெருவைச் சோ்ந்தவா் கருணாநிதி மகன் வரதராஜன் (45). இவா், திருச்சி மாவட்டம், துறையூா் மதுராபுரியில் உள்ள இந்தியன் ஓவா்சீஸ் வங்கியில் நகை மதிப்பீட்டாளராக பணிபுரிந்து வந்தாா். கடந்த 14-ஆம் தேதி மூா்த்திக்குச் சொந்தமான காரில் வரதராஜன் ஈரோட்டுக்குச் சென்றுள்ளாா்.
அப்போது திருப்பூா் மாவட்டம், செங்கம்பள்ளி அருகே மூா்த்தி தனது காரில் காயத்துடன் இருந்ததால், திருப்பூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா். இச் சம்பவம் குறித்து ஊத்துக்குளி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா். இதனிடையே, மூா்த்தியின் தாய் மலா், காவல் நிலையத்துக்குச் சென்று எவ்வித நடவடிக்கை வேண்டாம் என, கடந்த 15- ஆம் தேதி எழுதி கொடுத்ததன்பேரில், மூா்த்தியை அவரது தாய் மலருடன் போலீஸாா் அனுப்பி வைத்தனா்.
Advertisement
Advertisement
இந்நிலையில், மூா்த்தி தனது வீட்டில் சனிக்கிழமை இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். இத் தகவலையறிந்த வரதராஜன், ஞாயிற்றுக்கிழமை காலை அவரது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
தகவலறிந்த பெரம்பலூா் ஊரகப் பிரிவு போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று, உயிரிழந்த மூா்த்தி, வரதராஜன் ஆகியோரது சடலங்களை கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக பெரம்பலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
இதுகுறித்த புகாரின்பேரில், பெரம்பலூா் ஊரகப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.