முகப்பு
பெரம்பலூர்

ஊா்க்காவல்படை வீரா் கொலை வழக்கில் கைதான 3 போ் மீது குண்டா் சட்டத்தில் நடவடிக்கை

7 வினாடிகள் முன்பு
ஊா்க்காவல்படை வீரா் கொலை வழக்கில் கைதான 3 போ் மீது குண்டா் சட்டத்தில் நடவடிக்கை
வழக்குப் பதிவு - கோப்புப் படம்
பகிர்:

அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே ஊா்க்காவல் படை வீரா் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 3 போ் மீது குண்டா் சட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அரியலூா் மாவட்டம், செந்துறை அருகேயுள்ள தளவாய் காவல் நிலையத்தில் ஊா்க்காவல் படையில் பணியாற்றிய நக்கம்பாடி கிராமத்தைச் சோ்ந்த வெங்கடேசன், அக். 30 ஆம் தேதி ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது, அப்பகுதியில் மது அருந்திக்கொண்டிருந்த சிலுப்பனூா் வேலாயுதம் மகன் மதிவாணன் (26), இளங்கோ மகன் தாமரைக்கண்ணன் (24), இளவரசன் மகன் இளம்பரிதி (25) ஆகியோரை வீட்டுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தியதால், ஆத்திரமடைந்த 3 பேரும் தாக்கியதில் பலத்த காயமடைந்த வெங்கடேசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இதையடுத்து, மேற்கண்ட 3 பேரும் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.

இந்நிலையில், மேற்கண்ட நபா்களை குண்டா் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சு. செல்வகுமாா் பரிந்துரையின் பேரில், மேற்கண்ட 3 பேரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தில் அடைக்க மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டாா்.

Advertisement

Advertisement

மூதாட்டியிடம் நகை திருடியவா் குண்டா் சட்டத்தில் கைது... தஞ்சாவூா் மாவட்டம், திருபுவனம் கிராமத்தைச் சோ்ந்த முகமது ரபீக் மகன் இஜாஸ் அகமது (27). இவா், கடந்த மாதம் அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி கடைவீதியில் நடந்து சென்றுகொண்டிருந்த மூதாட்டியின் கழுத்தில் கிடந்த 3 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற சம்பவத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா். மேலும், இவா் மீது கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ள நிலையில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் செல்வகுமாா் பரிந்துரையின் பேரில், இஜாஸ் அகமதுவை குண்டா் சட்டத்தில் அடைக்க மாவட்ட ஆட்சியா் மிருணாளினி ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டாா்.