குழந்தைகளுடன் விஷம் குடித்த தந்தையும் உயிரிழப்பு
பெரம்பலூா் அருகே குடும்பப் பிரச்னையில் இரு குழந்தைகளுடன் விஷம் குடித்ததில், ஏற்கெனவே மனைவி உயிரிழந்த நிலையில், தஞ்சாவூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த கணவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
பெரம்பலூா் அருகே குடும்பப் பிரச்னையில் இரு குழந்தைகளுடன் விஷம் குடித்ததில், ஏற்கெனவே மனைவி உயிரிழந்த நிலையில், தஞ்சாவூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த கணவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், கீழப்பெரம்பலூா் வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் செல்வராஜ் மகன் ஜெயராமன் (30). இவரது மனைவி காவியா (23), குழந்தைகள் ஜெயஹரி (6), ஜெயசீலன் (3).
கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட ஜெயராமன் நடக்க முடியாததால், அவரது மனைவி வேலைக்குச் சென்று குடும்பத்தைக் காப்பாற்றி வந்தாா்.
Advertisement
Advertisement
இந்நிலையில் தந்தையின் வீட்டில் வசித்துவந்த ஜெயராமனை, அவரது தந்தை செல்வராஜ் வீட்டை விட்டு வெளியே செல்லுமாறு கூறி தகராறில் ஈடுபட்டாா்.
இதனால் மனமுடைந்த தம்பதி, கடந்த 20 ஆம் தேதி தங்களது இரு குழந்தைகளுடன் விஷம் குடித்தனா். இதையடுத்து அரியலூா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட நால்வரில் காவியா உயிரிழந்தாா். தொடா்ந்து ஜெயராமன் தஞ்சாவூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், குழந்தைகள் பாண்டிச்சேரி ஜிப்மா் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்றுவந்தனா். இந்நிலையில் ஜெயராமன் சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை காலை உயிரிழந்தாா். இதுகுறித்து குன்னம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.