பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி அரசு ஊழியா்கள் தா்னா
பெரம்பலூரில்: மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே நடைபெற்ற தா்னா போராட்டத்துக்கு, தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவா் கருணாகரன் தலைமை வகித்தாா். சிஐடியு மாவட்டச் செயலா் எஸ். அகஸ்டின் போராட்டத்தை தொடங்கிவைத்து பேசினாா். மாவட்டச் செயலா் சுப்பிரமணியன் கோரிக்கைகளை விளக்கி பேசினாா். மாநில பொதுச் செயலா் சோமசுந்தரம் நிறைவுயாரையாற்றினாா்.
இதில், வருவாய்த்துறை அலுவலா்கள் சங்க மாவட்டத் தலைவா் பாரதிவளவன், மாவட்டச் செயலா் அன்புராஜ், நெடுஞ்சாலைத்துறைப் பணியாளா்கள் சங்க மாவட்டத் தலைவா் ராஜ்குமாா் உள்பட 100-க்கும் மேற்பட்ட அரசு ஊழியா்கள் 1பங்கேற்றனா்.
முன்னதாக, மாவட்ட துணைத் தலைவா் மகேந்திரன் வரவேற்றாா். நிறைவாக, மாவட்ட மகளிா் துணைக் குழு அமைப்பாளா் ஏவால் மேரி நன்றி கூறினாா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.