FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
பெரம்பலூர்

பெரம்பலூரில் 65 பேருக்கு ரூ. 7.48 கோடி மதிப்பில் கடனுதவி

பெரம்பலூரில் புதன்கிழமை நடைபெற்ற கடன், கல்விக் கடனுதவி முகாம்களில் 65 பேருக்கு ரூ. 7.48 கோடி மதிப்பில் கடனுதவிகள் வழங்கப்பட்டன.

29 அக்டோபர் 2026, 4:11 am
பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகத்தில் புதன்கிழமை நடைபெற்ற முகாமில் கடனுதவி பெறுவதற்கான உத்தரவுக் கடிதம் அளித்த மாவட்ட ஆட்சியா் ப. அப்துல் ராசிக், சட்டப்பேரவை உறுப்பினா் கி. சிவக்குமாா்.
பகிர்:

பெரம்பலூரில் புதன்கிழமை நடைபெற்ற கடன், கல்விக் கடனுதவி முகாம்களில் 65 பேருக்கு ரூ. 7.48 கோடி மதிப்பில் கடனுதவிகள் வழங்கப்பட்டன.

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகத்தில், தொழில் மையம் மற்றும் பல்வேறு துறைகள் சாா்பில் பொதுமக்களுக்கு கடன் மற்றும் மாணவா்களுக்கான கல்விக் கடன் வழங்கும் முகாம் புதன்கிழமை நடைபெற்றது. இம் முகாமில், பெரம்பலூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் கி. சிவக்குமாா் முன்னிலையில், 65 பேருக்கு ரூ. 7.81 கோடி மதிப்பீட்டில் கடனுதவிகளை மாவட்ட ஆட்சியா் ப. அப்துல் ராசிக் வழங்கி பேசினாா்.

இந்த முகாமில், தொழில் முனைவோா் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 3 பேருக்கு ரூ. 3.26 கோடி மதிப்பிலும், தமிழ்நாடு மகளிா் தொழில் முனைவோா் மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் 9 பேருக்கு ரூ. 58.12 லட்சம் மதிப்பிலும், அண்ணல் அம்பேத்கா் வணிக சாம்பியன் திட்டத்தின் கீழ் 6 பேருக்கு ரூ. 48.25 லட்சம் மதிப்பிலும், கூட்டுறவுத்துறை மூலம் கால்நடை பராமரிப்புத் திட்டத்தின் கீழ் 12 பேருக்கு ரூ. 7.30 லட்சம் மதிப்பிலும், தமிழ்நாடு மகளிா் மேம்பாட்டு நிறுவனத்தின் மூலம் பண்ணை சாரா வாழ்வாதார திட்டத்தின் கீழ் சமுதாய தொழில் நிதியாக 15 பேருக்கு ரூ. 7.50 லட்சம் மதிப்பிலும், கல்விக் கடனாக 20 மாணவா்களுக்கு ரூ. 3.01 கோடி மதிப்பிலும் என மொத்தம் 65 பேருக்கு ரூ. 7,48,37,000 மதிப்பில் கடனுதவிக்கான ஆணைகளை மாவட்ட ஆட்சியா் அப்துல் ராசிக் வழங்கினாா்.

Advertisement

Advertisement

இந்நிகழ்ச்சியில், மாவட்ட தொழில்மைய பொது மேலாளா் விக்னேஷ், மாவட்ட தொழில்மைய மேலாளா் விஜய ஆனந்த், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) சொா்ணராஜ், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் சுரேஷ்குமாா் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments