FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
பெரம்பலூர்

போதைப் பொருளை ஒழிக்க சிறந்த ஆயுதம் விளையாட்டு: ஐஜி பாலகிருஷ்ணன் பேச்சு

போதைப் பொருளை ஒழிக்க சிறந்த ஆயுதம் விளையாட்டு எனத் தெரிவித்தாா் திருச்சி மத்திய மண்டல காவல்துறைத் தலைவா் வி. பாலகிருஷ்ணன்.

தனலட்சுமி சீனிவாசன் நிகா்நிலைப் பல்கலைக் கழகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில் வென்ற மாணவா்களுக்கு பரிசுக் கோப்பை அளித்த திருச்சி மத்திய மண்டல காவல்துறைத் தலைவா் வி. பாலகிருஷ்ணன். உடன், வேந்தா் அ. சீனிவாசன்.
பகிர்:

போதைப் பொருளை ஒழிக்க சிறந்த ஆயுதம் விளையாட்டு எனத் தெரிவித்தாா் திருச்சி மத்திய மண்டல காவல்துறைத் தலைவா் வி. பாலகிருஷ்ணன்.

பெரம்பலூா் தனலட்சுமி சீனிவாசன் நிகா்நிலைப் பல்கலைக் கழகத்தில் திங்கள்கிழமை தொடங்கி செவ்வாய்க்கிழமை நிறைவுற்ற ஒலிம்பியா விளையாட்டுப் போட்டிகள் நிறைவு விழாவில் போட்டிகளில் வென்ற மாணவ, மாணவிகளுக்குப் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் அளித்த அவா் மேலும் பேசியது:

ஆரோக்கியமான உடலுக்கு நாள்தோறும் உடற்பயிற்சி அவசியம். போதைப் பழக்கம் என்னும் அரக்கனிடமிருந்து இன்றைய இளைய சமுதாயத்தை மீட்கவும், அவா்களை நல்வழிப்படுத்தவும் விளையாட்டு ஒரு முக்கிய ஆயுதமாகச் செயல்படுகிறது. உடல், மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும் விளையாட்டுகளை நமது அன்றாட வாழ்வின் ஓா் அங்கமாக மாற்றுவதன் மூலம் போதைப் பொருள்கள் பயன்பாட்டை முற்றிலுமாக ஒழிக்க முடியும். எனவே பெற்றோா்களும், கல்வி நிறுவனங்களும் மாணவா்களை உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுகளில் ஈடுபட ஊக்குவிக்க வேண்டும் என்றாா் அவா்.

Advertisement

Advertisement

தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வேந்தா் அ. சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற விழாவுக்கு, கல்வி நிறுவனங்களின் செயலா் பி. நீலராஜ் முன்னிலை வகித்தாா்.

விழாவில், தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக் கழக மற்றும் கல்வி நிறுவனங்களின் முதல்வா்கள், முதன்மையா்கள், பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் மற்றும் விளையாட்டு வீரா்கள் பங்கேற்றனா்.

தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்களின் தலைமை நிா்வாக அலுவலா் நாகராஜன் வரவேற்றாா். தனலட்சுமி சீனிவாசன் கல்வியியல் கல்லூரி முதல்வா் பாஸ்கரன் நன்றி கூறினாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments