FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

செவிலியர் மாணவிகளுக்கு பட்டயம்

புதுக்கோட்டை டிஎஸ்எச்- பாராமெடிக்கல் பயிற்சி நிலையத்தில் மாணவிகளுக்கு பட்டயச்சான்று வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

9 ஜனவரி 2024, 12:19 pm
பகிர்:

புதுக்கோட்டை டிஎஸ்எச்- பாராமெடிக்கல் பயிற்சி நிலையத்தில் மாணவிகளுக்கு பட்டயச்சான்று வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கிராமப்புறப் பெண்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் தரமான மருத்துவக் கல்வி அளிக்கும் பொருட்டு தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தால் அங்கீகாரம் பெற்ற டிஎஸ்எச் பாரமெடிக்கல்  பயிற்சி நிலையத்தில் நடைபெற்ற இறுதியாண்டு மாணவிகளுக்கான சான்றிதழ் வழங்கும் விழாவுக்கு டீம் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை நிர்வாக இயக்குநர் கே.எச். சலீம் தலைமை வகித்தார். மருத்துவர் கரு. ராமநாதன், மருத்துவமனை முதன்மைச் செயலர் பி. தனசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

புதுகை அரசு மருத்துவமனை இணை இயக்குநர் எஸ். சையதுமொகைதீன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு இறுதியாண்டு மாணவிகளுக்கு பட்டயச் சான்றுகளை வழங்கினார். மருத்துவர்கள் சலீம் அப்துல்குத்தூஸ், வெங்கடேசன், அனிதா, மகேஸ்வரி ஆகியோர் செவிலியர் பணியின் முக்கியத்துவம் குறித்துப் பேசினர்.

Advertisement

Advertisement

இதில் 2012-2013ஆம் ஆண்டு முதல் மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments