ஸ்ரீபாரதி கல்வியியல் கல்லூரியில் வகுப்புகள் தொடக்கம்
புதுகை அருகேயுள்ள கைக்குறிச்சி ஸ்ரீபாரதி கல்வியியல் கல்லூரியில் 11 ஆம் ஆண்டு வகுப்புகள் தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
புதுகை அருகேயுள்ள கைக்குறிச்சி ஸ்ரீபாரதி கல்வியியல் கல்லூரியில் 11 ஆம் ஆண்டு வகுப்புகள் தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விழாவிற்கு ஸ்ரீபாரதி கல்வி நிறுவனங்களின் தலைவர் குரு. தனசேகரன் தலைமை வகித்தார். செயலர் கே.ஆர். குணசேகரன், அறங்காவலர்கள் உறுப்பினர்கள் கே. ரெங்கசாமி அ. கிருஷ்ணமூர்த்தி, முதல்வர் எஸ். பிரசன்னகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கவிஞர் மு.பா. தொடக்கவுரையாற்றினார். விழாவில், மாவட்ட ஆசிரியர் கல்வி, பயிற்சி நிறுவனத்தின் முதல்வர் என். செல்லத்துரை மாணவிகளுக்கு பாடப் புத்தகங்களை வழங்கிப் பேசியது:
அறிவு அற்றம் காக்கும் கருவி மட்டுமல்ல, குற்றம் நீக்கும் கருவியும் அதுதான். அறிவை சரியான பாதையில் பயன்படுத்துகிறவர்கள் காந்தியைப்போல் உயர்கிறார்கள். தவறான பாதையில் பயன்படுத்துவர்கள் ஹிட்லரைப்போல் அழிகிறார்கள். இளைஞர்களைப் பற்றிய உண்மையான அக்கரையுடன் அணுகி அவர்களது திறமையை அவர்களுக்குகே அறிமுகம் செய்து விட்டால் போதும், இந்த நாட்டில் அற்புதங்கள் தானாக நிகழும். மாறி வருகின்ற இன்றைய சூழலில் ஆசிரியரால் மட்டுமே நல் உலகமாக மாற்ற முடியும் என தற்போதைய சமுதாயம் உணருகிறது. ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும், தனி மனித வளர்ச்சிக்கும் கல்வி தான் மிக முக்கியம். பள்ளியில் கல்வி கற்பிக்கப்படும்போது அதனை மாணவர் மத்தியில் அவனின் வாழ்க்கை பாடமாக இருக்க வேண்டும் என புரிய வைத்தல் மிக அவசியம். கல்வி உலகின் வாயில்கள் இன்றைக்கு திறந்துவிடப்பட்டுள்ளது. அதனை முழுமையாக வழி நடத்திச் செல்ல வேண்டிய வாய்ப்பு ஆசிரியர் கல்வியில் உங்களுக்கு கிடைத்து இருக்கிறது. நல்ல ஆசிரியர்கள் ஞானியைப் போன்றவர்கள் , இதனைக்கருதியே தங்களது குழந்தைகளை ஒப்படைக்கிறார்கள். ஆகையால் நீங்கள் பாடம் கற்பிப்பது மட்டும் உங்களது கடமையல்ல. அதையும் தாண்டி பண்பாட்டை வளர்ப்பதும், பகுத்தறிவை விதைப்பதும், ஒழுக்கமுடைய சமுதாயத்தை உருவாக்குவதும் போன்ற பல்வேறு சமூக கட்டமைப்பு கடமைகள் உங்களுக்கு உள்ளது என்றார்.
நிகழ்ச்சியில் துணை முதல்வர் சுப.தாரகேஸ்வரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.