FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

பள்ளியில் இன்ராக்ட் சங்கம் தொடக்கம்

பொன்னமராவதி வலையபட்டி சிதம்பரம் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் இன்ராட்க்ட் சங்கம் தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

30 ஜனவரி 2024, 10:08 pm IST
பகிர்:

பொன்னமராவதி வலையபட்டி சிதம்பரம் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் இன்ராட்க்ட் சங்கம் தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
விழாவிற்கு ரோட்டரி சங்க மாவட்ட ஆளுநர் தேர்வு ஏ.எல்.சொக்கலிங்கம் தலைமை வகித்து இன்ராக்ட் சங்க புதிய நிர்வாகிகளை பணியமர்த்திப் பேசினார். இன்ராக்ட் சங்கத்தின் தலைவராக மாணவி நித்ய ஸ்ரீ, செயலராக சண்முகப்பிரியா, பொருளராக பிரீத்தா ஆகியோர் பணியேற்றனர்.  பள்ளியின் இயக்குநர் விஎஸ்டி.பிஎல்.சிதம்பரம், மதுரை மெட்ரோ சங்கத் தலைவர் அருண் விஜய் மல்லி, செயலர் அருண் அமர்நாத், முன்னாள் தலைவர் ஒ. அருணாச்சலம், புதுப்பட்டி ரோட்டரி சங்கத்தலைவர் அ.வெள்ளைச்சாமி உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர். விழாவில் பள்ளி மாணவ, மாணவியர் சார்பில் கேரள வெள்ள நிவாரண நிதியாக ரூ. 14 ஆயிரம் வழங்கப்பட்டது.  முன்னதாக பள்ளி முதல்வர் வே.முருகேசன் வரவேற்றார். தனி அலுவலர் நெ.ராமச்சந்திரன் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments