FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

புதுக்கோட்டையில் கிராம நிர்வாக அலுவலர்கள் பேரணி

சொந்த மாவட்டங்களுக்கு பணி மாறுதல் வழங்க வேண்டும் என்பனஉள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை

30 ஜனவரி 2024, 11:25 pm IST
பகிர்:

சொந்த மாவட்டங்களுக்கு பணி மாறுதல் வழங்க வேண்டும் என்பனஉள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டையில் கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் செவ்வாய்க்கிழமைபேரணிநடத்தினர்.
 பட்டா உள்பிரிவு  இனங்களில் கிராம நிர்வாக அலுவலர்களின் பரிந்துரையை உறுதிசெய்ய வேண்டும். அனைத்து கிராம நிர்வாக அலுவலர்களுக்கும் 100 சதவிகிதம் மடிக்கணினி வழங்கப்படுவதை உறுதி செய்தும், ஆண்டுகள் பணி முடித்த அனைத்து கிராம நிர்வாக அலுவலர்களுக்கும் துணை வட்டாட்சியர் நிலையில் பதவி உயர்வு வழங்க வேண்டும்.
 அனைத்து வருவாய் கிராமங்களுக்கும் உடனடியாக புதிய கிராம நிர்வாக அலுவலர்களை நியமிப்பதோடு கூடுதல் பொறுப்பு கிராமங்களின் பணியாற்றுபவர்களுக்கு கூடுதல் பொறுப்பூதியத்தை வழங்க வேண்டும். 
புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி இந்த பேரணி நடத்தப்பட்டது.தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற  பேரணியில்  மாவட்டத் தலைவர் உலகநாதன், மாவட்ட பொறுப்பாளர் வசந்தகுமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். முடிவில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை  மனு அளிக்கப்பட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments