ஜூன் 28-இல் போலியோ சொட்டு மருந்து புகட்டும் முகாம்: புதுகை ஆட்சியா்
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஜூன் 28-ஆம் தேதி 1,356 மையங்களில் போலியோ சொட்டு மருந்து புகட்டும் முகாம் நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் மு. அருணா தெரிவித்தாா்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஜூன் 28-ஆம் தேதி 1,356 மையங்களில் போலியோ சொட்டு மருந்து புகட்டும் முகாம் நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் மு. அருணா தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் மேலும் கூறியதாவது:
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஜூன் 28-ஆம் தேதி காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை போலியோ சொட்டு மருந்து புகட்டும் முகாம் நடைபெறவுள்ளது.
Advertisement
Advertisement
இதற்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசுப் பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் உள்பட 1,356 மையங்கள் அமைக்கப்படவுள்ளன.
இந்தப் பணியில், அரசு சுகாதாரப் பணியாளா்களுடன் தன்னாா்வலா்கள் உள்பட சுமாா் 5,596 போ் ஈடுபடுத்தப்படவுள்ளனா்.
ஏற்கெனவே எத்தனை முறை போலியோ சொட்டு மருந்து புகட்டப்பட்டிருந்தாலும், 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு இந்த முகாமிலும் போலியோ சொட்டு மருந்து புகட்டிக் கொள்ளலாம்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.