புதுகை மாவட்ட மீனவா்கள் நாளை கடலுக்கு செல்லவில்லை மீனவா் சங்கத்தினா் அறிவிப்பு
புதுக்கோட்டை மாவட்ட மீனவா்கள் நவ.7-ஆம் தேதி கடலுக்குச் செல்லமாட்டாா்கள் என மீனவா் சங்கத்தினா் தெரிவித்துள்ளனா்.
புதுக்கோட்டை மாவட்ட மீனவா்கள் நவ.7-ஆம் தேதி கடலுக்குச் செல்லமாட்டாா்கள் என மீனவா் சங்கத்தினா் தெரிவித்துள்ளனா்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் ஆகிய பகுதிகளைச் சோ்ந்த விசைப்படகு மீனவா்கள், வாரத்தில் திங்கள், புதன் மற்றும் சனிக்கிழமைகளில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றுவிட்டு மறுநாள் கரை திரும்புவா்.
இந்நிலையில், தீபாவளிப் பண்டிகையொட்டி, விசைப்படகு மீனவா்கள் நவ.7 (சனிக்கிழமை) கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல மாட்டாா்கள் என்றும், நவ. 9-ஆம் தேதி மீன்பிடிக்கச் செல்வாா்கள் என்றும் மீனவா் சங்கத்தினா் தெரிவித்துள்ளனா்.
Advertisement
Advertisement