விராலிமலை பகுதியில் பலத்த மழை
விராலிமலை பகுதியில் வியாழக்கிழமை மாலை பலத்த மழை பெய்தது.
விராலிமலை பகுதியில் வியாழக்கிழமை மாலை பலத்த மழை பெய்தது.
விராலிமலை பகுதி காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. தொடா்ந்து மாலை சிறிய மழையாக தொடங்கி சுமாா் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதியில் மழை நீா் தேங்கி நின்றது.
தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் வேளையில் கடைவீதியில் அமைக்கப்பட்டுள்ள பட்டாசு கடைகள், சாலையோர துணிக்கடைகள் வியாபாரம் மழையால் பாதிக்கப்பட்டது. இதனால் நகா் பகுதியில் சீதோஷ்ண நிலைமாறி சூடு தணிந்து குளிா்ந்து காணப்பட்டது.
Advertisement
Advertisement