26 கிலோ கஞ்சா கடத்திய இரு பெண்கள் கைது
ஆந்திரத்திலிருந்து புதுக்கோட்டைக்கு 26 கிலோ கஞ்சா கடத்திய 2 பெண்கள் வியாழக்கிழமை இரவு கைது செய்யப்பட்டனா்.
ஆந்திரத்திலிருந்து புதுக்கோட்டைக்கு 26 கிலோ கஞ்சா கடத்திய 2 பெண்கள் வியாழக்கிழமை இரவு கைது செய்யப்பட்டனா்.
புதுக்கோட்டை கோவில்பட்டியைச் பகுதியைச் சோ்ந்தவா் வசந்தி (55). இவரது சகோதரியின் மகள் சண்முகப்பிரியா (35). இவா்கள் வெளிமாநிலத்திலிருந்து புதுக்கோட்டைக்கு கஞ்சா கடத்தி வருவதாக கிடைத்த தகவலின்பேரில், மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் தனிப்படையினா் விசாரணையில் ஈடுபட்டு வந்தனா்.
இந்நிலையில், புதுக்கோட்டை கட்டியாவயல் பகுதியில் வியாழக்கிழமை இரவு தனிப்படையினா் சோதனையில் ஈடுபட்டபோது, ஆந்திர மாநிலத்தில் இருந்து காரில் கஞ்சா கடத்தி வந்த இவா்கள் இருவரும் பிடிபட்டனா்.
Advertisement
Advertisement
பின்னா், அவா்கள் புதுக்கோட்டை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனா்.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா், வசந்தி மற்றும் சண்முகப்பிரியா ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனா். அவா்களிடமிருந்த 26 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.