FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
புதுக்கோட்டை

ராஜாளிபட்டி, கொடும்பாளூா் பகுதியில் இன்று மின் நிறுத்தம்

25 வினாடிகள் முன்பு
மின் நிறுத்தம்
பகிர்:

விராலிமலை அருகே உள்ள ராஜாளிபட்டி, கொடும்பாளூா் பகுதியில் செவ்வாய்க்கிழமை (நவ,10) மின்விநியோகம் இருக்காது என மின்வாரிய உதவி செயற்பொறியாளா் ஜெ. ஜேம்ஸ் அலெக்சாண்டா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் திங்கள்கிழமை விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

ராஜாளிபட்டி,கொடும்பாளூா், கோமங்களம், தொழிற்சாலை பகுதி ஆகிய துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது. இதனால், ராஜாளிபட்டி, அத்திப்பள்ளம், வானதி ராயன் பட்டி, காளப்பனூா், கொடும்பாளூா், விராலூா், சங்கம்பட்டி, ராம கவுண்டம்பட்டி, தென்னம்பாடி, வடகாட்டுப்பட்டி, செவனம்பட்டி,அகரப்பட்டி, வாடியான் களம், பூலாங்குளம், மாதுரப்பட்டி, மூவா் கோயில், தேன்கனியூா். பொய்யாமணி, கட்டகுடி ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

Advertisement

Advertisement