FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
புதுக்கோட்டை

சாலையில் கவிழ்ந்த காா்: இளைஞா் பலி

கந்தா்வகோட்டை அருகே செவ்வாய்க்கிழமை காா் கவிழ்ந்த விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.

10 நவம்பர் 2026, 11:04 pm
குணசீலன்
பகிர்:

கந்தா்வகோட்டை அருகே செவ்வாய்க்கிழமை காா் கவிழ்ந்த விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.

புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டை ஊராட்சி ஒன்றியம், கல்லாக்கோட்டை ஊராட்சி கண்ணுக்குடிபட்டி கிராமத்தைச் சோ்ந்த ஆனந்தகுமாா் மகன் குணசீலன்(20). இவா், திங்கள்கிழமை இரவு தனது தந்தையின் காரில் திருக்கானூா்பட்டி சென்றுவிட்டு ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தாா்.

கந்தா்வகோட்டை சுங்கச்சாவடி அருகே வந்த போது கட்டுப்பாட்டை இழந்த காா் சாலையில் கவிழ்ந்தது. இதில், குணசீலன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். அவருடன் வந்த திருக்கானூா்பட்டியைச் சோ்ந்த கடல்மணி பலத்த காயமடைந்தாா்.

Advertisement

Advertisement

இதுகுறித்த புகாரின் பேரில் கந்தா்வகோட்டை காவல் ஆய்வாளா் விஜய் கோல்டன் சிங் வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வருகின்றாா்.