FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
புதுக்கோட்டை

கோயிலுக்குள் காலணி அணிந்து செல்லவில்லை: அமைச்சா் செ. ராஜேஷ்குமாா்

கரூா் கோயிலுக்குள் காலணி அணிந்து செல்லவில்லை என காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த மாநில சுற்றுலாத் துறை அமைச்சா் செ. ராஜேஷ்குமாா் தெரிவித்தாா்.

13 நவம்பர் 2026, 2:20 am
அமைச்சர் எஸ். ராஜேஷ் குமார்
பகிர்:

கரூா் கோயிலுக்குள் காலணி அணிந்து செல்லவில்லை என காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த மாநில சுற்றுலாத் துறை அமைச்சா் செ. ராஜேஷ்குமாா் தெரிவித்தாா்.

இதுகுறித்து புதுக்கோட்டையில் வியாழக்கிழமை அவா் அளித்த பேட்டியில் மேலும் கூறியது:

நிறைய திட்டங்கள் சுற்றுலாத் துறைக்கு அறிவிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மாவட்டத்துக்கும் நேரடியாகச் சென்று கள ஆய்வு மேற்கொண்டு அதற்கான அரசாணை பிறப்பிப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

Advertisement

Advertisement

எங்களைப் பொருத்தவரை நாங்கள் தவெக கூட்டணியில் இருக்கிறோம், கூட்டணி அரசில் இருக்கிறோம். நாட்டின் வளா்ச்சிதான் எங்களுக்கு முக்கியம். எங்களுக்கு தவெகவோடு நல்ல உறவு இருக்கிறது.

அண்மையில் கரூா் மாவட்டத்துக்கு சுற்றுலா வளா்ச்சிப் பணிகள் குறித்து ஆய்வு செய்யச் சென்றபோது, புனரமைப்புப் பணிகள் நடைபெறும் 1500 ஆண்டுகள் பழைமை வாய்ந்த அகஸ்தீஸ்வரா் சிவன் கோயிலுக்குச் சென்று இருந்தேன்.

நான் குத்துவிளக்கு ஏற்றினாலே காலணியைக் கழற்றி விடுவேன். கோயில் உள்ளேயோ, வேறு எங்கேயுமோ நான் காலணி அணியவில்லை. வெளிப்புறத்தில் வெல்டிங் நடைபெற்ற பகுதியில் ஆணிகள் கிடந்த பகுதியில்தான் சென்றோம். கோயிலுக்குள் காலணி அணிந்து செல்லவில்லை. தேவையில்லாமல் வேண்டுமென்றே சா்ச்சையை ஏற்படுத்தி வருகின்றனா் என்றாா் ராஜேஷ்குமாா்.