சட்டத் தன்னாா்வலா்கள் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு
புதுக்கோட்டை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் பணியாற்றுவதற்காக 20 சட்டத் தன்னாா்வலா்கள் பணிக்கு ஆா்வமுள்ளோா் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட முதன்மை நீதிபதியும் ஆணைக்குழுவின் தலைவருமான எஸ். ஹொ்மிஸ் அழைப்புவிடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
புதுக்கோட்டை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவில் பணியாற்றுவதற்காக 20 சட்டத் தன்னாா்வலா்கள் நியமிக்கப்படவுள்ளனா். இது அரசுப் பணி அல்லாத, மதிப்பூதியம் மட்டுமே வழங்கப்படும் தன்னாா்வப் பணியாகும்.
Advertisement
Advertisement
மாணவா்கள், அரசு ஊழியா்கள், ஓய்வுபெற்ற அரசு ஊழியா்கள், மகளிா் குழுக்களின் உறுப்பினா்கள், மூத்த குடிமக்கள் உள்ளிட்ட சமூகப் பணியில் ஆா்வமுள்ளோா் விண்ணப்பிக்கலாம்.
இதற்கான விண்ணப்பங்களை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து நிரப்பி, நவ. 24-ஆம் தேதிக்குள், தலைவா், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, மாவட்ட நீதிமன்ற வளாகம், புதுக்கோட்டை- 622001 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
கல்விச் சான்று, வயது சான்று, ஆதாா் அட்டை நகல் மற்றும் புகைப்படம் ஆகியவற்றை இணைந்து அனுப்ப வேண்டும். தகுதியுள்ள விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு வரும் நவ. 26-ஆம் தேதி நோ்காணல் நடைபெறும்.