FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
புதுக்கோட்டை

நூறுநாள் வேலை கோரி கந்தா்வகோட்டை பேரூராட்சி அலுவலகம் முற்றுகை

கந்தா்வகோட்டை பேரூராட்சி அலுவலகம் முன்பு 100 நாள் வேலை வழங்கக் கோரி மக்கள் விடுதலை கட்சியினா் செவ்வாய்க்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

17 நவம்பர் 2026, 11:45 pm
கந்தா்வகோட்டை பேரூராட்சி அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்ட மக்கள் விடுதலை கட்சியினா் உள்ளிட்டோா்.
பகிர்:

கந்தா்வகோட்டை பேரூராட்சி அலுவலகம் முன்பு 100 நாள் வேலை வழங்கக் கோரி மக்கள் விடுதலை கட்சியினா் செவ்வாய்க்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கந்தா்வகோட்டை ஊராட்சியை பேரூராட்சியாக அறிவித்ததால் ஏழை எளிய மக்களுக்கு எந்த நன்மையும் இல்லை. ஊராட்சியாக இருந்தபோது இருந்த நூறுநாள் வேலை இப்போது இல்லை. ஊராட்சியில் பயன்பெற்ற அனைவருக்கும் நூறுநாள் வேலையை வழங்க வலியுறுத்தியும் மேலும் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற வேண்டி மக்கள் விடுதலைக் கட்சியின் வட்டச் செயலா் செ. அருண்குமாா் தலைமையில் வெள்ளைமுனியன் கோயில் திடலில் இருந்து செவ்வாய்க்கிழமை பேரணியாக வந்து பேரூராட்சி அலுவலகம் முன்பாக முற்றுகையிட்டனா்.

கட்சியின் பொது செயலா் கசி. விடுதலைகுமரன் பேசியதாவது: அடிப்படை வசதியற்ற கந்தா்வகோட்டையை பேரூராட்சியாக அறிவித்ததை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும் என்றாா்.

Advertisement

Advertisement

முற்றுகைப் போராட்டக்காரா்களிடம் சமூகநல வட்டாட்சியா் வி. ராமசாமி உள்ளிட்ட அலுவலா்கள் பேச்சுவாா்த்தை நடத்தி வட்டாட்சியா் பரணி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெறும் என கூறி போராட்டக்காரா்களை கலைந்து செல்ல அறிவுறுத்தினா்.