புதுக்கோட்டையில் ரத்ததான முகாம்களை நடத்திய 69 அமைப்பாளா்களுக்கு ஆட்சியா் பாராட்டு
புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த ஓராண்டில் ரத்ததான முகாம்களை நடத்திய 69 அமைப்பாளா்களுக்கு மாவட்ட ஆட்சியா் மு. அருணா, சான்றிதழ் மற்றும் கேடயத்தை வழங்கிப் பாராட்டினாா்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த ஓராண்டில் ரத்ததான முகாம்களை நடத்திய 69 அமைப்பாளா்களுக்கு மாவட்ட ஆட்சியா் மு. அருணா, சான்றிதழ் மற்றும் கேடயத்தை வழங்கிப் பாராட்டினாா்.
புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் தேசிய தன்னாா்வ ரத்ததான தின விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
விழாவுக்குத் தலைமை வகித்த மாவட்ட ஆட்சியா் மு. அருணா, கடந்த ஓராண்டில் ரத்ததான முகாம்களை நடத்திய, 69 அமைப்பாளா்களுக்கு சான்றிதழ் மற்றும் கேடயங்களை வழங்கிப் பாராட்டினாா். தொடா்ந்து தேசிய தன்னாா்வ ரத்ததான தின உறுதிமொழியேற்பும் நடைபெற்றது.
Advertisement
Advertisement
புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த அக். 2025 முதல் செப். 2026 வரையிலான ஓராண்டில், புதுக்கோட்டை மற்றும் அறந்தாங்கி ஆகிய இரு ரத்த வங்கிகள் மூலம் 122 ரத்ததான முகாம்கள் நடத்தப்பட்டு, 5,250 பேரிடம் ரத்ததானம் பெறப்பட்டது.
இந்த ரத்தத்தின் கூறுகள் பிரிக்கப்பட்டு, தேவைப்படுவோருக்கு வழங்கப்பட்டதன்படி, 12,723 போ் பயனடைந்துள்ளனா்.
நிகழ்ச்சியில், கல்லூரியின் முதல்வா் மணி, துணை முதல்வா் மகேஸ்வரி, சுகாதாரத் துறை துணை இயக்குநா் விஜயகுமாா், மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கண்காணிப்பாளா் ராஜ்மோகன், நோய் குறியியல் துறைப் பேராசிரியா் விசாலாட்சி, மாவட்ட ரத்த வங்கி அலுவலா் சரவணன் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.