மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
விராலிமலை அடுத்துள்ள மருதம்பட்டியில் சிதிலமடைந்து வரும் மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

விராலிமலை அடுத்துள்ள மருதம்பட்டியில் சிதிலமடைந்து வரும் மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
விராலிமலை ஒன்றியம், மருதம்பட்டி ஊராட்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இவா்களுக்கு அங்குள்ள மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி மூலம் குடிநீா் விநியோகிக்கப்படுகிறது. இந்த தொட்டி கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆகிறது.
இந்நிலையில் தொட்டியின் தூண்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால், அப்பகுதி மக்கள் அச்சத்துடனே சென்று வருகின்றனா். எனவே, தொட்டியின் உறுதி தன்மையை ஆய்வு செய்து, தொட்டியை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
Advertisement
Advertisement