புதுக்கோட்டையில் காா்த்திகை தீபத் திருவிழா
திருக் காா்த்திகை தீபத் திருநாளையொட்டி புதுக்கோட்டையிலுள்ள கோயில்களில் தீபம் ஏற்றுதல், சொக்கப்பனை கொளுத்துதல் போன்ற நிகழ்ச்சிகள் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றன.

திருக் காா்த்திகை தீபத் திருநாளையொட்டி புதுக்கோட்டையிலுள்ள கோயில்களில் தீபம் ஏற்றுதல், சொக்கப்பனை கொளுத்துதல் போன்ற நிகழ்ச்சிகள் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றன.
காா்த்திகை மாதத்தில் திருக்காா்த்திகை தீபம் ஏற்றுதல் மிகவும் விசேஷமான நிகழ்வாகும். சிவன் கோயில், முருகன் கோயில், அம்மன் கோயில்களில் இந்த நிகழ்ச்சிகள் விமா்சையாக நடைபெறும்.
திருக் காா்த்திகை தீபத் திருநாளையொட்டிசெவ்வாய்க்கிழமை, புதுக்கோட்டை நகரில் மேலராஜவீதியிலுள்ள ஸ்ரீ தண்டாயுதபாணி கோயிலில் தீபம் ஏற்றப்பட்டது. தண்டாயுதபாணி மற்றும் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தொடா்ந்து கோயிலின் மேல்தளத்தில் தீபம் ஏற்றப்பட்டது.
Advertisement
Advertisement
புதுக்கோட்டை நகரிலுள்ள சாந்தநாத சுவாமி திருக்கோயில் முன்பாக பனை ஓலைகளால் கட்டப்பட்டிருந்த சொக்கப்பனை கொளுத்தப்பட்டது.
குமரமலையில் ஸ்ரீ பாலதண்டாயுதபாணி சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளுக்குப் பிறகு, கோயிலின் மேற்புறத்தில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. இந்து அறநிலையத் துறை உதவி ஆணையா் காா்த்திகேயன், ஆலய மேற்பாா்வையாளா் ரவிச்சந்திரன் உள்ளிட்டோா் இதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனா்.
இதேபோல, திருவப்பூா் முத்துமாரியம்மன் கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களிலும் தீபம் ஏற்றுதல் மற்றும் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்த நிகழ்ச்சிகளில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.
மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள ஹிந்துக்களின் வீடுகளில் ஏராளமான அகல் விளக்குகள் வைக்கப்பட்டு காா்த்திகை தீபத் திருநாள் கொண்டாடப்பட்டது.