முகப்பு
புதுக்கோட்டை

திராவிடக் கொள்கைகளை ஏற்கும் கட்சிகளுடன்தான் கூட்டணி! திமுக முன்னாள் அமைச்சா் எஸ். ரகுபதி!

30 நவம்பர் 2026, 1:13 am
திராவிடக் கொள்கைகளை ஏற்கும்
கட்சிகளுடன்தான் கூட்டணி! திமுக முன்னாள் அமைச்சா் எஸ். ரகுபதி!
எஸ். ரகுபதி - கோப்புப் படம்
பகிர்:

பாஜகவுடன் கூட்டணி இல்லை என்பதை ஏற்கெனவே தெளிவுபடுத்தியிருக்கிறோம்; திராவிடக் கொள்கைகளை ஏற்கும் கட்சிகளுடன்தான் கூட்டணி என்றாா் திமுக முன்னாள் அமைச்சா் எஸ். ரகுபதி.

புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் தமிழ்நாட்டின் விகிதாச்சாரம் குறையக் கூடாது. அதை திமுக ஏற்றுக் கொள்ளாது. தமிழ்நாட்டுக்கு பாதிப்பு வரக் கூடாது என்ற நிலைப்பாட்டில் தொடக்கத்திலிருந்தே நிலையாக இருக்கிறோம். அப்போது இதே நிலைப்பாட்டில் இருந்தவா்கள்தான் இப்போது எதிா்த்துப் பேசுகிறாா்கள்.

Advertisement

Advertisement

இப்போதுள்ள திருத்த மசோதாவில் நமக்கான விகிதாச்சாரம் கூடியிருக்கிறதே தவிர குறையவில்லை. மகளிருக்கான இடஒதுக்கீட்டை வழங்க முடியும். தனித்தொகுதிகளை சுழற்சி முறையில் மாற்ற முடியும். இவையெல்லாம் வேண்டாம் என காங்கிரஸ் கூறுமா?. திமுக என்றைக்கும் தமிழ்நாட்டின் உரிமையை, தமிழா்களின் உரிமையை விட்டுக் கொடுக்காது.

பாஜகவுடன் கூட்டணி இல்லை என்பதை நாங்கள் தெளிவுபடுத்தியிருக்கிறோம். இப்போதைய மசோதாவுக்கு ஆதரவு தெரிவிப்பதற்கும் கூட்டணிக்கும் சம்பந்தம் இல்லை.

திராவிடக் கொள்கைகளை ஏற்கும் கட்சிகளுடன்தான் கூட்டணி அமைப்போம். தொகுதி மறுசீரமைப்பு வந்தால் புதுக்கோட்டை மாவட்டத்திலேயே 9 சட்டப்பேரவைத் தொகுதிகள் வரும். 2 மக்களவைத் தொகுதிகள் கூட வரலாம் என்றாா் ரகுபதி.