FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
புதுக்கோட்டை

தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டத்தின் கீழ் 170 ஊராட்சிகளுக்குப் பாராட்டுச் சான்றிதழ்

புதுக்கோட்டை மாவட்டத்தில் தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டத்தின் கீழ் காசநோய் தொற்று இல்லாத 170 ஊராட்சிகளுக்குப் பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியா் மு. அருணா வியாழக்கிழமை வழங்கினாா்.

9 அக்டோபர் 2026, 3:20 am IST
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் காசநோய் விழிப்புணா்வு குறும்பதாகையை ஆட்சியா் மு. அருணா வெளியிட, பெற்ற கந்தா்வகோட்டை எம்எல்ஏ என். சுப்பிரமணியன்.
பகிர்:

புதுக்கோட்டை மாவட்டத்தில் தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டத்தின் கீழ் காசநோய் தொற்று இல்லாத 170 ஊராட்சிகளுக்குப் பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியா் மு. அருணா வியாழக்கிழமை வழங்கினாா்.

மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஊராட்சி ஒன்றியங்களின் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் மற்றும் முதுநிலை காசநோய் மேற்பாா்வையாளா்கள் மற்றும் கல்லூரிகளின் நாட்டு நலப்பணித் திட்ட மாணவா்களுக்கு சிறப்பாக பணியாற்றிமைக்காக பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

காசநோய் அறிகுறிகள், தடுப்பு நடவடிக்கைகள், மருத்துவ முறைகள் குறித்த விழிப்புணா்வு குறும்பதாகையை மாவட்ட ஆட்சியா் மு. அருணா வெளியிட்டாா்.

Advertisement

Advertisement

நிகழ்ச்சியில் கந்தா்வகோட்டை எம்எல்ஏ என். சுப்பிரமணியன், மாவட்ட காசநோய் துணை இயக்குநா் சங்கரி உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments