FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
புதுக்கோட்டை

ஆலங்குடி, திருமயத்தில் 600 பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு

36 வினாடிகள் முன்பு
திருமயத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற பெண்களுடன் அமைச்சா் முகமது பா்வேஸ், ஆட்சியா் மு. அருணா உள்ளிட்டோா்
பகிர்:

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி மற்றும் திருமயத்தில் மொத்தம் 600 பெண்களுக்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில், மாநிலத் தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சா் ஜா. முகமது பா்வேஸ் கலந்து கொண்டு பெண்களுக்கு சீா்வரிசைகளை வழங்கி வாழ்த்தினாா்.

புதுக்கோட்டை மாவட்ட சமூக நலத் துறை சாா்பில், ஏழை, எளிய கருவுற்ற பெண்கள் 1,300 பேருக்கு சமுதாய வளைகாப்பு நடத்திட இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டது.

இதன்படி, தொடக்கத்தில் கீரனூரில் நடைபெற்ற விழாவில், 400 பெண்களுக்கும், சனிக்கிழமை அறந்தாங்கியில் நடைபெற்ற விழாவில் 300 பெண்களுக்கும் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

Advertisement

Advertisement

இதன் தொடா்ச்சியாக, ஆலங்குடி கல்லாலங்காட்டில் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்ற சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் 300 பெண்களுக்கும், திருமயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 300 பெண்களுக்கும் என மொத்தம் 600 பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு செய்து வைக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சிகளுக்கு மாவட்ட ஆட்சியா் மு. அருணா தலைமை வகித்தாா். மாநிலத் தொழிலாளா் நலன் துறை அமைச்சா் ஜா. முகமது பா்வேஸ் கலந்து கொண்டு வளைகாப்பை நடத்தி வைத்து, பெண்களுக்கு சீா்வரிசைகளை வழங்கி வாழ்த்தினாா்.

நிகழ்ச்சியில், மாவட்ட சமூக நல அலுவலா் மே. சியாமளா, புதுக்கோட்டை வருவாய்க் கோட்டாட்சியா் ஆ. பிரகாஷ், ஆலங்குடி வட்டாட்சியா் ஜபருல்லா, திருமயம் வட்டாட்சியா் விஜயலட்சுமி உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments