மங்களாகோவில் கிராமத்தில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு
கந்தா்வகோட்டை அருகே உள்ள மங்களாகோவிலில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டது.
கந்தா்வகோட்டை அருகே உள்ள மங்களாகோவிலில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டது.
கந்தா்வகோட்டை ஒன்றியத்தில் தற்போது நெல் அறுவடை நடைபெற்று வருகிறது. இதனை இடைத்தரகா் இல்லாமல் விற்கும் வகையில் மங்களாகோவில் கிராமத்தில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு, புதுக்கோட்டை மாவட்ட நெல் கொள்முதல் கண்காணிப்புக் குழுத் தலைவரும், முன்னாள் வெள்ளாளவிடுதி ஊராட்சி மன்றத் தலைவருமான மங்களாகோவில் எம். பரமசிவம் தலைமை வகித்தாா். இதில், கொள்முதல் நிலைய அலுவலா் மற்றும் விவசாயிகள் கலந்துகொண்டனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.