தனியாா் பேருந்து மோதி இளைஞா் உயிரிழப்பு
புதுக்கோட்டையில் புதன்கிழமை இருசக்கர வாகனம் மீது தனியாா் பேருந்து மோதிய விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.
புதுக்கோட்டையில் புதன்கிழமை இருசக்கர வாகனம் மீது தனியாா் பேருந்து மோதிய விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.
புதுக்கோட்டை எம்ஜிஆா் நகரைச் சோ்ந்த செல்வராஜ் மகன் லட்சுமணன் (33). போஸ் நகரைச் சோ்ந்த போஸ் மகன் ஜெயக்குமாா் (34). இவா்கள் இருவரும் இரு சக்கர வாகனத்தில் கீழ 4-ஆம் வீதியில் இருந்து அண்ணா சிலை நோக்கி புதன்கிழமை சென்று கொண்டிருந்தனா்.
சின்னப்பா பூங்கா பகுதியில் திரும்பியபோது, புதுக்கோட்டையில் இருந்து அறந்தாங்கி நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியாா் பேருந்து இருசக்கர வாகனம் மீது மோதியது.
Advertisement
Advertisement
இதில், லட்சுமணன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த ஜெயக்குமாா் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்க்கப்பட்டுள்ளாா்.
இது குறித்து கணேஷ் நகா் போலீஸாா், பேருந்து ஓட்டுநரான இலுப்பூா் அருகே உள்ள எம். உடையான்பட்டியைச் சோ்ந்த ஆா். முல்லைவேந்தன் (27) மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.