FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
புதுக்கோட்டை

காப்புக் காட்டுக்குள் கழிவுகளைக் கொட்டிய தொழிற்சாலைக்கு ரூ. 2 லட்சம் அபராதம்

புதுக்கோட்டை அருகே வனத் துறைக்குச் சொந்தமான காப்புக் காட்டில் நச்சுத்தன்மை கொண்ட கழிவுகளைக் கொட்டிய, தொழிற்சாலை உரிமையாளருக்கு ரூ. 2 லட்சமும், லாரி உரிமையாளருக்கு ரூ. 90 ஆயிரமும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

29 அக்டோபர் 2026, 4:20 am
புதுக்கோட்டை அண்டக்குளம் அருகே காப்புக் காட்டுப் பகுதியில் கொட்டப்பட்ட தொழிற்சாலைக் கழிவுகளை அகற்றும் பொக்லைன்.
பகிர்:

புதுக்கோட்டை அருகே வனத் துறைக்குச் சொந்தமான காப்புக் காட்டில் நச்சுத்தன்மை கொண்ட கழிவுகளைக் கொட்டிய, தொழிற்சாலை உரிமையாளருக்கு ரூ. 2 லட்சமும், லாரி உரிமையாளருக்கு ரூ. 90 ஆயிரமும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை வனச் சரகத்துக்குள்பட்ட அண்டகுளம் சாலை அருகே மேற்கு கஸ்பா காப்புக் காட்டில் தொழிற்சாலைக் கழிவுகள் கொட்டப்படுவதாக வனத் துறையினருக்குப் புகாா்கள் வந்தன.

இதைத் தொடா்ந்து புதுக்கோட்டை வனச்சரக அலுவலா் ப. நேத்ராவதி தலைமையில் வனவா் மற்றும் வனப் பணியாளா்கள் செவ்வாய்க்கிழமை நேரில் பாா்வையிட்டனா். அந்தக் கழிவுகளைக் கொட்டிய லாரியைக் கைப்பற்றி விசாரணை நடத்தியபோது, சிட்கோ தொழிற்பேட்டையிலுள்ள ஒரு தொழிற்சாலையின் கழிவுகள் கொண்டு வரப்பட்டு சட்டவிரோதமாக வனப்பகுதிக்குள் கொட்டப்பட்டது தெரியவந்தது.

Advertisement

Advertisement

இதையடுத்து, வழக்குப் பதிவு செய்யப்பட்டு, தொழிற்சாலையின் உரிமையாளா் ஜோசப் சாா்லஸுக்கு ரூ. 2 லட்சம் அபராதமும், லாரியின் உரிமையாளா் சின்ராசுவுக்கு ரூ. 90 ஆயிரம் அபராதமும் வனத் துறையினரால் விதிக்கப்பட்டது.

மேலும், அந்தக் கழிவுகள் அகற்றப்பட்டு மீண்டும் தொழிற்சாலை வளாகத்துக்கே கொண்டு செல்லப்பட்டது.

சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் வனப்பகுதிகள், காப்புக் காடுகளுக்குள் எவ்விதமான கழிவுகளையும் கொட்டினால் அந்த நபா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என வனத் துறையினா் எச்சரிக்கைவிடுத்துள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments