இழப்பீடு வழங்காததால் அரசுப் பேருந்து ஜப்தி
சாலை விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கப்படாததால் அரசுப் பேருந்து திங்கள்கிழமை ஜப்தி செய்யப்பட்டது.
சாலை விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கப்படாததால் அரசுப் பேருந்து திங்கள்கிழமை ஜப்தி செய்யப்பட்டது.
தஞ்சாவூர் அருகேயுள்ள வல்லம் தேவாரம் நகரைச் சேர்ந்தவர் செல்வகுமார் (54). மின் மோட்டார் பழுது நீக்குநர். மோட்டார் சைக்கிளில் சென்ற இவர் கடந்த
2011, ஜன. 19ஆம் தேதி தேவாரம் நகரில் அரசுப் பேருந்து மோதி உயிரிழந்தார்.
Advertisement
Advertisement
இதையடுத்து, இழப்பீடு கோரி தஞ்சாவூர் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் செல்வகுமாரின் மனைவி சுமதி உள்ளிட்டோர் மனு அளித்தனர். இந்த வழக்கில் செல்வகுமாரின் குடும்பத்துக்கு வட்டியுடன் ரூ. 4.48 லட்சம் வழங்குமாறு நீதிமன்றம் ஆணையிட்டது.
ஆனால், இந்த ஆணை நிறைவேற்றப்படாததால் அதே நீதிமன்றத்தில் சுமதி அண்மையில் நிறைவேற்று மனு தாக்கல் செய்தார். இதையடுத்து, அரசுப் பேருந்தை ஜப்தி செய்யுமாறு நீதிபதி டி. ராஜசேகரன் செப். 9ஆம் தேதி உத்தரவிட்டார்.
இதன்பேரில் ஆணை நிறைவேற்றுநர் அழகர் புதிய பேருந்து நிலையத்துக்கு திங்கள்கிழமை சென்று பட்டுக்கோட்டைக்குப் புறப்படுவதாக இருந்த அரசுப் பேருந்தை ஜப்தி செய்தார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.