உணவு விடுதி ஊழியர் மனைவி கொலை:கணவரிடம் போலீஸார் விசாரணை
பட்டுக்கோட்டையில் உணவு விடுதி ஊழியரின் மனைவி திங்கள்கிழமை கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவரது கணவரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பட்டுக்கோட்டையில் உணவு விடுதி ஊழியரின் மனைவி திங்கள்கிழமை கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவரது கணவரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பட்டுக்கோட்டை அண்ணா நகரைச் சேர்ந்தவர் கபீர்கான் (35). உணவு விடுதி ஊழியர். இவர் புதுக்கோட்டையைச் சேர்ந்த பரிமளா என்கிற ஷர்மிளா பானு (30) என்பவரை கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதிக்கு அப்துல்லா (7), ஆயிஷா (5) என இரு குழந்தைகள் உள்ளனர்.
குடிப்பழக்கம் உடைய கபீர்கான் மது அருந்தி விட்டு வந்து தனது மனைவியிடம் அடிக்கடி தகராறில் ஈடுபடுவாராம். இந்நிலையில், திங்கள்கிழமை அதிகாலையில் கபீர்கான் வீட்டில் இருந்து சண்டையிடும் சப்தம் கேட்டுள்ளது. இதையடுத்து பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் சென்று பார்த்த போது பரிமளா கழுத்தில் காயத்துடன் இறந்து கிடந்துள்ளார்.
Advertisement
Advertisement
இதுகுறித்து அவர்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த பட்டுக்கோட்டை நகர காவல் நிலையத்தினர் பரிமளாவின் சடலத்தைக் கைப்பற்றி பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிந்து சந்தேகத்தின் பேரில் பரிமளாவின் கணவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.