FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

கூட்டுறவு சிக்கன கடன் சங்க பேரவைக் கூட்டம்

பட்டுக்கோட்டையில் கோட்ட சத்துணவு மற்றும் குழந்தைகள் நலப் பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன சங்கத்தின் 14-வது பொது பேரவைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

9 ஜனவரி 2024, 12:19 pm
பகிர்:

பட்டுக்கோட்டையில் கோட்ட சத்துணவு மற்றும் குழந்தைகள் நலப் பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன சங்கத்தின் 14-வது பொது பேரவைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

கு. பரசுராமன் எம்பி தலைமை வகித்தார். பட்டுக்கோட்டை நகர்மன்றத் தலைவர் எஸ்.ஆர். ஜவஹர்பாபு முன்னிலை வகித்தார்.

விழாவில், வீட்டு வசதி, நகர்புற வளர்ச்சி மற்றும் வேளாண்மைத்துறை அமைச்சர் ஆர். வைத்திலிங்கம் கலந்துகொண்டு சத்துணவு அமைப்பாளர்கள் 42 பேருக்கும், சமையலர்கள் 26 பேருக்கும் ரூ. 62.60 லட்சம் கடனுதவி வழங்கினார்.

Advertisement

Advertisement

மேலும் சிக்கன சேமிப்பு பங்குத் தொகையாக சங்க உறுப்பினர்கள் 1015 பேருக்கு ரூ.9,70,420, 26 பேருக்கு ரூ. 2,07,730 வழங்கினார்.

அவர் பேசுகையில், நாணயம் இருந்தால்தான் எந்த ஒரு அமைப்பும் சிறப்பாக செயல்பட முடியும். ஆகையால் பயனாளிகள் வாங்கிய கடனை நாணயமாக திருப்பிச் செலுத்த வேண்டியது மிக அவசியம் என்றார்.நிகழ்ச்சியில், மாவட்ட பால்வளத் தலைவர் ஆர். காந்தி, முன்னாள் எம்எல்ஏ பி.என். ராமச்சந்திரன், ஆர். கார்த்திகேயன், வி.கே.டி. பாரதி, ஏ. மலையய்யன், பி. சுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். சங்கத் தலைவர் கோ. பழனிவேலு வரவேற்றார். செயலர் க. ஜெயலட்சுமி நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments