முடிகொண்டான் ஆற்றில் ஆண் சடலம்
பாபநாசம் அருகே முடிகொண்டான் ஆற்றில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் கிடந்தது வெள்ளிக்கிழமை தெரியவந்தது.
பாபநாசம் அருகே முடிகொண்டான் ஆற்றில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் கிடந்தது வெள்ளிக்கிழமை தெரியவந்தது.
இனாம்கிளியூர் ஊராட்சி நடுப்படுகை கிராமம் முடிகொண்டான் ஆற்றில் சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடந்தது. இதுகுறித்து இனாம்கிளியூர் கிராம நிர்வாக அலுவலர் கோகுலகிருஷ்ணன் கொடுத்த புகாரின் பேரில், பாபநாசம் காவல் ஆய்வாளர் அண்ணாதுரை மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
தடய அறிவியல்துறை உதவி இயக்குநர் வள்ளி சடலத்தை சோதனை செய்தார். சடலம் அழுகிய நிலையில் இருந்ததால் பாபநாசம் அரசு மருத்துவமனை மருத்துவர் ராஜ்மோகன் அந்த இடத்திலேயே பிரேத பரிசோதனை செய்தார். இறந்தவர் யார் என போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.