சுவாமிமலையில் ஆடி கிருத்திகை விழா
சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை ஆடிக் கிருத்திகை விழா சிறப்பாக நடைபெற்றது.
சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை ஆடிக் கிருத்திகை விழா சிறப்பாக நடைபெற்றது.
முருகப் பெருமானின் ஆறுபடை வீடுகளுள் நான்காவது படை வீடாக அமைந்திருப்பது சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயில் ஆகும். இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆடிக் கிருத்திகை விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இதன்படி, ஞாயிற்றுக்கிழமை ஆடிக்
கிருத்திகை விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகமும், சிறப்பலங்காரமும் செய்விக்கப்பட்டது. தொடர்ந்து மங்கள வாத்தியங்கள் முழங்க ஆராதனையும் நடைபெற்றது. இதில் இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.