பேராவூரணியில் பைக் மோதி பெண் சாவு
பேராவூரணியில் புதன்கிழமை மோட்டார் சைக்கிள் மோதி பெண் உயிரிழந்தார்.
பேராவூரணியில் புதன்கிழமை மோட்டார் சைக்கிள் மோதி பெண் உயிரிழந்தார்.
பேராவூரணி பாந்தக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் மனைவி கமலம் (55). இவர் புதன்கிழமை காலை கடைவீதி வந்துவிட்டு சேதுசாலையில் வந்தபோது, எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மோதி பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் வழியில் உயிரிழந்தார். மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த நீலகண்டபுரம் பகுதியை சேர்ந்த நிசாருதீன் பலத்த காயமடைந்து தஞ்சாவூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். புகாரின் பேரில், பேராவூரணி போலீஸார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.