வாக்காளர் பட்டியல் சுருக்க திருத்த முறைக்காகக் கலந்தாய்வு
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகத்தில் மாவட்ட வாக்காளர் பட்டியல் சிறப்புச் சுருக்கத் திருத்த முறை தொடர்பாக
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகத்தில் மாவட்ட வாக்காளர் பட்டியல் சிறப்புச் சுருக்கத் திருத்த முறை தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு வாக்காளர் பட்டியல் பார்வையாளரும், தமிழ்நாடு சிறுபான்மையினர் நலத் துறை இயக்குநருமான வள்ளலார் தலைமை வகித்தார். கூட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்த முறையில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அரசியல் கட்சி பிரதிநிதிகள் தங்களின் கருத்துகளை வாக்காளர் பட்டியல் பார்வையாளரிடம் தெரிவித்தனர். இதுதொடர்பாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அரசு அலுவலர்களுக்கு வாக்காளர் பட்டியல் பார்வையாளர் அறிவுரைகள் வழங்கினார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ந. சக்திவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.