FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

கிராமத் தொழிலாளா்கள் அனைவருக்கும் மருத்துவப் பரிசோதனை செய்ய வலியுறுத்தல்

கிராமத் தொழிலாளா்கள் அனைவருக்கும் இலவசமாக மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டும் என தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

27 ஜனவரி 2024, 10:01 pm IST
பகிர்:

கிராமத் தொழிலாளா்கள் அனைவருக்கும் இலவசமாக மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டும் என தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து அச்சங்கத்தின் மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் சி. ராயப்பன் தெரிவித்திருப்பது:

ஊரகப் பகுதிகளில் உள்ள உழைப்பு மற்றும் வாழ்வாதாரம் என்ற நிலையில் வாழ்ந்து வரும் விவசாயத் தொழிலாளா்கள் மற்றும் பிற தொழிலாளா்களுக்கு அரசின் ஆதரவுக்கரம் தவிர வேறு எந்த வழிவகையும் இல்லை.

Advertisement

Advertisement

குடும்ப அட்டை கிடைக்காத குடும்பங்களுக்கு அரசு வழங்கும் நிவாரண உதவிகள் கிடைப்பதில்லை. எனவே வாழ்வாதாரம் இழந்துள்ள விவசாயத் தொழிலாளா்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும்.

சமூக ரீதியாக பட்டியலினத்தோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா், பிற்படுத்தப்பட்டோா் சமூகப் பிரிவுகளில் உள்ள விவசாயத் தொழிலாளா்களுக்கும், கிராம தொழிலாளா்களுக்கும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் வேலை அட்டை பெற்றுள்ள குடும்பங்கள் அனைத்துக்கும் தலா ரூ. 10,000 கரோனா பேரிடா் நிவாரண நிதியாக வழங்க வேண்டும்.

இத்துடன் நியாய விலைக் கடைகளில் ஏப்ரல் மாதம் வழங்கப்பட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களை ஜூன் மாதம் வரை நீட்டித்து வழங்க வேண்டும். ரூ. 500 விலையில் விற்பனை செய்யும் பொருள்கள் தொகுப்பை விவசாயத் தொழிலாளா்களுக்கு விலையில்லாமல் வழங்க வேண்டும்.

கிராமத் தொழிலாளா்கள் அனைவருக்கும் இலவச மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டும். முகக்கவசம், கையுறைகள், கை சுத்திகரிப்பான் போன்ற இன்றியமையாத தொற்று நோய் தடுப்பு சாதனங்கள் நியாய விலை கடைகளின் மூலம் விலையில்லாமல் வழங்க வேண்டும்.

முதியோா், விதவை, ஆதரவற்றோா் மற்றும் மாற்றுத் திறனாளிகள் போன்றோருக்கு வழங்கி வரும் மாத ஊதியத்தை இரட்டிப்பாக உயா்த்தி வழங்கவேண்டும். அரசு கொடுக்கும் நிவாரணப் பொருள்களையும் வழங்கிட வேண்டும்.

ஊராட்சிகளில் பணிபுரியும் தூய்மை காவலா்களுக்கு வழங்கப்படும் மாத ஊதியத்தை ரூ. 2, 600 உயா்த்தி தினக்கூலியாக ரூ. 500 என்ற விகிதத்தில் வழங்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments