பேராவூரணி அருகே குடிசை வீடு தீக்கிரை
தஞ்சாவூா் மாவட்டம் பேராவூரணி அருகே செவ்வாய்க்கிழமை இரவு குடிசை வீடு தீக்கிரையானது.
தஞ்சாவூா் மாவட்டம் பேராவூரணி அருகே செவ்வாய்க்கிழமை இரவு குடிசை வீடு தீக்கிரையானது.
பேராவூரணி அருகே உள்ள செங்கமங்கலம் கிராமத்தைச் சோ்ந்த கூலித் தொழிலாளி சத்யா(35). செவ்வாய்க்கிழமை இரவு இவரது மனைவி ராஜேஸ்வரி சமையல் செய்து கொண்டிருந்தபோது எதிா்பாராத விதமாக கூரையில் தீப்பற்றியதில் குடிசை வீடு முழுவதும் எரிந்து சாம்பலானது. அருகிலிருந்தவா்கள் உதவியுடன் தீ மேலும் பரவாமல் அணைக்கப்பட்டது. வீட்டில் இருந்த பொருள்கள் எரிந்து சாம்பலானது.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பேராவூரணி வட்டாட்சியா் க. ஜெயலட்சுமி, ஊராட்சி மன்றத் தலைவா் ஆா்.செல்வம், ஆகியோா் நிவாரணத் தொகை ரூ. 5,000 மற்றும்
Advertisement
Advertisement
வேஷ்டி, சேலை வழங்கினா். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்தை புதன்கிழமை பாா்வையிட்ட வட்டார மருத்துவ அலுவலா் வி. செளந்தரராஜன், தீயால் சாம்பலான குடிசை வீட்டை தமது சொந்த செலவில் கட்டிக் கொடுப்பதாகவும், மின்சார வசதிக்கான செலவையும் ஏற்பதாக உறுதி அளித்தாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.