தஞ்சாவூர்

கணவர் இறந்த துக்கத்தில் மனைவி செய்த கொடூரம்: குழந்தைகள் பலி

தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர், அருகே வெண்டயம்பட்டி, கிராமத்தை சேர்ந்தவர் விஜயகுமார்,  இவர் விவசாய கூலி தொழிலாளி.

DIN

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர், அருகே வெண்டயம்பட்டி, கிராமத்தை சேர்ந்தவர் விஜயகுமார்,  இவர் விவசாய கூலி தொழிலாளி. இவரது மனைவி சத்யா (30), இவர்களுக்கு முகேஷ் (7), நித்திஷ் (5) இரண்டு மகன்கள் உள்ளனர்.

கடந்த மார்ச் மாதம் கணவர் விஜயகுமார் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். கணவர் இறந்த துயரத்தில் மனம் வெறுத்த தாய் சத்யா இரண்டு குழந்தைகளுக்கும் வயல்களில்  தெளிக்கும் பூச்சிக் கொல்லி மருந்தை  மருந்தில் கலந்து இரண்டு மகன்களுக்கும்  கொடுத்துவிட்டு தானும் குடிக்க முயற்சி செய்து கொண்டிருக்கும் போது, இவரது மகன் வீட்டில் இருந்து வெளியே வந்து வாந்தி எடுத்தபோது அதை பார்த்த அக்கம்பக்கத்தினர்  ஓடி வந்துள்ளனர். 

பூச்சிக்கொல்லி மருந்தை குடிக்க முயன்ற தாய் சத்யா கையில் வைத்து இருந்த மருந்து பாட்டிலை தட்டிவிட்டு மூன்று பேரையும் மீட்டு,  தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்து சிகிச்சை பெற்று வந்துள்ளனர். இந்த நிலையில் மகன்கள் முகேஷ் , நித்திஷ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் தாய் சத்யா தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது குறித்து  பூதலூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த சம்பவத்தால் அந்த கிராமம்  பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது .

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதல்முறையாக வெளிநாடு சென்றார் போப் 14-ம் லியோ!

வயிறு உப்புசமாக இருக்கிறதா? சரிசெய்யும் வழிகள் இதோ...

இனிய மாலைவேளை... மாளவிகா மோகனன்!

ஜனவரியில் தொடங்கும் மகளிர் பிரீமியர் லீக்!

சபரிமலை அன்னதான உணவில் அதிரடி மாற்றம்! புதிய மெனு என்ன?

SCROLL FOR NEXT