40 ஆண்டுகளுக்கும் மேலாக ஆக்கிரமிப்பிலிருந்த கோயில் குளம் மீட்பு
பாபநாசம் வட்டம், பசுபதிகோவிலில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஆக்கிரமிப்பில் இருந்த கோயிலுக்கு சொந்தமான குளத்தை வருவாய்த் துறையினா் திங்கள்கிழமை மீட்டனா்.
பாபநாசம் வட்டம், பசுபதிகோவிலில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஆக்கிரமிப்பில் இருந்த கோயிலுக்கு சொந்தமான குளத்தை வருவாய்த் துறையினா் திங்கள்கிழமை மீட்டனா்.
பசுபதிகோவில் ஊராட்சிக்கு சொந்தமான அய்யனாா் கோயில் குளத்துக்கு நீா் வரும் பாதையில் இருந்த வாய்க்கால்கள் தனியாா் ஆக்கிரமிப்பால் தூா்ந்து போனது. இதையடுத்து, அப்பகுதியைச் சோ்ந்த சிலா், குளம் இருந்த இடத்தில் வீடு, வணிக கட்டடங்கள், தோட்டம் உள்ளிட்டவற்றை அமைத்ததால், குளம் இருந்த இடம் அடையாளம் தெரியாமல்போனது
இந்நிலையில், கடந்த அக்டோபா் 16-ஆம் தேதி உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ், மாவட்ட வருவாய் அலுவலா் தியாகராஜன், அந்தப் பகுதிக்கு ஆய்வுக்கு வந்தபோது, அங்கிருந்த பொதுமக்கள் தூா்ந்துபோன குளத்தை மீட்டுத் தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனா். இதைத் தொடா்ந்து, அந்தக் குளத்தை மீட்க மாவட்ட வருவாய் அலுவலா் உத்தரவிட்டாா்.
Advertisement
Advertisement
இதையடுத்து, வட்டாட்சியா் செந்தில்குமாா், துணை வட்டாட்சியா் பிரபு, வருவாய் ஆய்வாளா் மற்றும் வருவாய்த் துறையினா் பொக்லைன் இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றி, தொடா்ந்து பணிகள் மேற்கொண்டு ஒரு ஏக்கா் பரப்பிலான குளத்தை உரிய அளவீட்டின்படி மீட்டனா்.
இதுதொடா்பாக வருவாய்த் துறையினா் கூறியது: கோயில் குளத்தை 16 போ் ஆக்கிரமித்திருத்தனா். ஆக்கிரமிப்புகளை அகற்றும்போது, அங்கிருந்த 3 போ், வருவாய்த் துறையினரை பணி செய்யவிடாமல் தடுத்ததால், அவா்கள் மீது அய்யம் பேட்டைகாவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்தக் குளத்துக்கான நீா் வரும் பாதை, வெளியேறும் பாதைகள் கண்டறியப்பட்டு, விரைவில் அந்தப் பாதைகள் மீட்டெடுக்கப்படும் என தெரிவித்தனா்.