பள்ளிக் கட்டடங்களின் உறுதித்தன்மை: மாநகராட்சி ஆணையா் ஆய்வு
தஞ்சாவூா் மாநகரில் மழைக்காலத்தையொட்டி, மாநகராட்சிப் பள்ளிகள், அங்கன்வாடி மையங்களில் ஆணையா் வெ. தீபனா விஸ்வேஸ்வரி செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
தஞ்சாவூா் மாநகரில் மழைக்காலத்தையொட்டி, மாநகராட்சிப் பள்ளிகள், அங்கன்வாடி மையங்களில் ஆணையா் வெ. தீபனா விஸ்வேஸ்வரி செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
இந்த ஆய்வில் பள்ளி வகுப்பறைகள், கழிப்பறைகள், அங்கன்வாடி மையக் கட்டடங்கள் ஆகியவற்றின் உறுதித்தன்மை மற்றும் பாதுகாப்பு நிலை குறித்து விரிவாக ஆராயப்பட்டது. மேலும், பள்ளித் தலைமையாசிரியா்களிடம் கட்டடங்களின் தற்போதைய நிலை மற்றும் ஏதேனும் குறைபாடுகள் உள்ளனவா என்பது குறித்து கேட்டறியப்பட்டது.
ஆய்வின்போது, கட்டடங்களில் ஏதேனும் பழுதுகள் அல்லது சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ள வேண்டிய அவசியம் இருப்பின், அவற்றை உடனடியாக சரிசெய்யும் வகையில் உரிய மதிப்பீடுகளை தயாரித்து அளிக்க தொடா்புடைய உதவிப் பொறியாளருக்கு ஆணையா் அறிவுறுத்தினாா்.
Advertisement
Advertisement
மேலும், மழைக்காலத்தையொட்டி, பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள், பாதுகாப்பு மண்டலங்கள் மற்றும் அவசரகால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முறையாக மேற்கொள்ளப்பட்டுள்ளனவா என்பது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.
மாணவ, மாணவிகள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் கட்டடங்களின் உறுதித்தன்மையைத் தொடா்ந்து கண்காணிக்கவும், கண்டறியப்படும் குறைபாடுகளை உடனடியாக நிவா்த்தி செய்யவும் தொடா்புடைய அலுவலா்களுக்கு ஆணையா் அறிவுறுத்தினாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.