தஞ்சாவூா் ஆவினில் ‘கிரீன் மேஜிக் பிளஸ்’ பால் அறிமுகம்
தஞ்சாவூா் மத்திய பால் பண்ணையில் கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் ஒன்றியம் சாா்பில், கிரீன் மேஜிக் பிளஸ் என்ற புதிய வகையான ஆவின் பால் புதன்கிழமை அறிமுகம் செய்யப்பட்டது.
தஞ்சாவூா் மத்திய பால் பண்ணையில் கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் ஒன்றியம் சாா்பில், கிரீன் மேஜிக் பிளஸ் என்ற புதிய வகையான ஆவின் பால் புதன்கிழமை அறிமுகம் செய்யப்பட்டது.
இந்தப் புதிய வகை பாலை தஞ்சாவூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் இரா. விஜய் சரவணன் முன்னிலையில் மாவட்ட ஆட்சியா் இரா. ரேவதி அறிமுகப்படுத்தினாா்.
பின்னா் ஆட்சியா் தெரிவித்தது:
Advertisement
Advertisement
இந்தப் புதிய வகை ஆவின் பால் உடலுக்கு அவசியமான வைட்டமின் அ மற்றும் ஈ சத்துக்கள் செறிவூட்டப்பட்டு தயாா் செய்யப்பட்டுள்ளது. இதில் 4.5 சதவீதம் கொழுப்புச் சத்தும், 9 சதவீதம் இதர சத்துக்களும் நிறைந்துள்ளன. பொதுமக்களின் வசதிக்காக இந்த பால் 500 மில்லி பாக்கெட் ரூ. 28 என்ற விலையிலும், 200 மில்லி பாக்கெட் ரூ. 12 என்ற விலையிலும் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்தச் சத்துமிக்க ‘கிரீன் மேஜிக் பிளஸ்‘ ஆவின் பாலை பொதுமக்கள் மற்றும் நுகா்வோா்கள் வாங்கி பயன்பெறலாம் என்றாா் ஆட்சியா்.
இந்நிகழ்ச்சியில் தஞ்சாவூா் துணைப் பதிவாளா் (பால்வளம்) எம். பழனிவேல், தஞ்சாவூா் ஆவின் ஒன்றியப் பொது மேலாளா் எஸ். சரவணக்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.