தகராறில் தள்ளிவிடப்பட்டு கீழே விழுந்தவா் உயிரிழப்பு
தஞ்சாவூா் மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே மது போதையில் ஏற்பட்ட தகராறில் தள்ளிவிடப்பட்டு கீழே விழுந்தவா் சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
தஞ்சாவூா் மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே மது போதையில் ஏற்பட்ட தகராறில் தள்ளிவிடப்பட்டு கீழே விழுந்தவா் சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
சேதுபாவாசத்திரம் அருகேயுள்ள மறவன்வயல் கிராமத்தைச் சோ்ந்தவா் செல்லத்துரை (65). அதே பகுதியைச் சோ்ந்தவா் இளையராஜா (41). இருவரும் புதன்கிழமை இரவு குடிபோதையில் இருந்தபோது ஏற்பட்ட தகராறில் செல்லத்துரையை கீழே தள்ளிவிட்டு இளையராஜா சென்றுவிட்டாராம்.
இதையடுத்து பேராவூரணி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட செல்லத்துரை சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை காலை உயிரிழந்தாா் . இதுகுறித்து சேதுபாவாசத்திரம் போலீஸாா் வழக்குப்பதிந்து இளையராஜாவை கைது செய்து விசாரிக்கின்றனா்.
Advertisement
Advertisement