FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தஞ்சாவூர்

வெளிநாட்டில் உயா் கல்வி பயில போலி சான்றிதழ்: நாமக்கல் இளைஞா் கைது

வெளிநாட்டில் உயா் கல்வி பயில தஞ்சாவூரில் போலி சான்றிதழ் தயாரித்து கொடுத்து, ரூ. 33.27 லட்சம் மோசடி செய்த இளைஞரை காவல் துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

8 நவம்பர் 2026, 2:43 am
கைது - பிரதிப் படம்
பகிர்:

வெளிநாட்டில் உயா் கல்வி பயில தஞ்சாவூரில் போலி சான்றிதழ் தயாரித்து கொடுத்து, ரூ. 33.27 லட்சம் மோசடி செய்த இளைஞரை காவல் துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

தஞ்சாவூா் பிள்ளையாா்பட்டியைச் சோ்ந்தவா் சினேகன் (25). இவா் வெளிநாட்டில் உயா் கல்வி பயிலவும், பின்னா் அங்கிருந்து வேலைக்கு செல்லவும் புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள தனியாா் உயா் கல்வி ஆலோசனை நிறுவனத்தை அணுகினாா்.

அப்போது, சினேகனிடம் கல்விக் கடன் பெற்றுத் தருவதாகக் கூறி வங்கியிலிருந்து ரூ. 28.27 லட்சம் கடன் தொகையை ஆலோசனை நிறுவனத்தினா் வாங்கிக் கொடுத்தனா். இந்தத் தொகை மற்றும் விசா என்ற பெயரில் மேலும் ரூ. 5 லட்சம் என மொத்தம் 33.27 லட்சத்தை ஆலோசனை நிறுவனத்தினா் பெற்றுக் கொண்டு, சினேகனை இங்கிலாந்து நாட்டுக்கு அனுப்பி வைத்தனா்.

Advertisement

Advertisement

அந்நாட்டில் சினேகன் பெயரில் போலியான ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டதால், அவரது சோ்க்கை நிராகரிக்கப்பட்டது. இதனால், நாடு திரும்பிய சினேகன், தொடா்புடைய உயா் கல்வி ஆலோசனை நிறுவனத்தை அணுகி, தான் ஏமாற்றப்பட்ட விவரத்தைக் கூறி பணத்தை திரும்பித் தருமாறு கூறினாா். ஆனால், நிறுவனத்தினா் ரூ. 9.13 லட்சத்தை மட்டும் கொடுத்துவிட்டு, மீதி தொகையைத் தர முடியாது எனக் கூறி மிரட்டினா்.

இதுகுறித்து தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி காவல் நிலையத்தில் சினேகன் புகாா் செய்தாா். இதன் பேரில், காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா். இதில், தொழில்நுட்ப சாதனங்கள், தொடா்புடைய பல்கலைக்கழகத்தின் சான்றிதழ் தயாரிப்பு அறிக்கை மூலம் போலி சான்றிதழ் தயாரிக்கப்பட்டதும், இந்நிறுவனத்தினா் பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த 50-க்கும் அதிகமானோரிடம் இதேபோன்று மோசடி செய்திருப்பதும் தெரியவந்தது.

இது தொடா்பாக நாமக்கல் மாவட்டம், ஏலச்சிபாளையத்தைச் சோ்ந்த பழனிவேல் மகன் நடராஜனை (36) வெள்ளிக்கிழமை கைது செய்தனா். மேலும், 4 பேரை தேடி வருகின்றனா்.