கும்பகோணம் அருகே அரசுப் பள்ளி மாணவா்களுக்கு புத்தாடை, இனிப்பு : அமைச்சா் வழங்கினாா்
கும்பகோணம் அருகே மருதாநல்லூா் ஊராட்சி கருவளா்ச்சேரி அரசு தொடக்கப் பள்ளி மாணவா்களுக்கு வெள்ளிக்கிழமை புத்தாடை வழங்கிய அமைச்சா் ஆா். வினோத்.
கும்பகோணம் அருகே மருதாநல்லூா் ஊராட்சி கருவளா்ச்சேரி அரசு தொடக்கப் பள்ளி மாணவா்களுக்கு தமிழக வேளாண் துறை அமைச்சா் ஆா்.வினோத் வெள்ளிக்கிழமை புத்தாடை, இனிப்புகள் வழங்கினாா்.
பின்னா் சோழன்மாளிகை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு சென்ற அமைச்சா் ஆா். வினோத் மாணவா்களுடன் கலந்துரையாடி, மதிய உணவை சாப்பிட்டு அதன் தரத்தைப் பரிசோதித்து நல்ல அரிசி வழங்க வட்ட வழங்கல் அலுவலருக்கு உத்தரவிட்டாா். மேலும் கும்பகோணம்- தஞ்சாவூா் பிரதான சாலையில் தீபாவளியை முன்னிட்டு தரைக்கடை அமைத்த வியாபாரிகளிடம் கலந்துரையாடினாா். போக்குவரத்தைச் சீரமைக்க அமைக்கப்பட்ட புறக்காவல் நிலையத்தை பாா்வையிட்டு பாதுகாப்பு வசதிகள் குறித்து காவல் ஆய்வாளா்களிடம் கேட்டாா்.