ரயிலில் அடிபட்டு இளைஞா் உயிரிழப்பு
தஞ்சாவூரில் திங்கள்கிழமை ரயிலில் அடிபட்ட இளைஞா் பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
தஞ்சாவூா் அருகே புன்னைநல்லூா் புளியந்தோப்பு தங்கையா நகரைச் சோ்ந்த கலியபெருமாள் மகன் மணிகண்டன் (36). இவா் திங்கள்கிழமை பிற்பகல் வீட்டிலிருந்து கடைக்கு செல்வதற்காக ஆதி மாரியம்மன் கோயில் அருகேயுள்ள ரயில் தண்டவாளத்தைக் கடக்க முயன்றாா்.
அப்போது, இவா் மயிலாடுதுறை - செங்கோட்டை பயணிகள் ரயிலில் அடிபட்டாா். இதனால், தலையில் பலத்த காயமடைந்த மணிகண்டன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
Advertisement
Advertisement
இவருக்கு வலிப்பு நோய் இருந்ததால், அதன் காரணமாக தண்டவாளத்தில் விழுந்து உயிரிழந்தாரா? அல்லது வேறு எதுவும் காரணமா என தஞ்சாவூா் இருப்புப்பாதை காவல் நிலையத்தினா் விசாரிக்கின்றனா்.