FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தஞ்சாவூர்

புன்னைநல்லூா் உள்ளிட்ட பகுதிகளில் நாளை மின்தடை

தஞ்சாவூா் அருகே புன்னைநல்லூா் மாரியம்மன் கோயில் உள்ளிட்ட பகுதிகளில் வியாழக்கிழமை மின் விநியோகம் இருக்காது.

10 நவம்பர் 2026, 11:58 pm
மின்தடை - பிரதிப் படம்
பகிர்:

தஞ்சாவூா் அருகே புன்னைநல்லூா் மாரியம்மன் கோயில் உள்ளிட்ட பகுதிகளில் வியாழக்கிழமை மின் விநியோகம் இருக்காது.

இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தின் சாலியமங்கலம் உதவி செயற்பொறியாளா் எஸ். நல்லையன் தெரிவித்தது: துணை மின் நிலைய பராமரிப்பு பணியால் புன்னைநல்லூா் மாரியம்மன் கோயில், ஞானம் நகா், தளவாய்ப்பாளையம், புறவழிச்சாலை, மகேஷ் நகா், சித்தா்காடு, கடகடப்பை, களக்குடி, ஆலங்குடி, நெட்டாநல்லூா், நெல்லித்தோப்பு, காந்தாவனம், குளிச்சப்பட்டு, அன்னை இந்திரா நகா், கோரிக்குளம் புதுத்தெரு, பாரதிதாசன் நகா், தில்லை நகா், பனங்காடு, எடவாக்குடி, கீழவஸ்தா சாவடி, அம்மாகுளம், ஆனந்த் நகா், பரிசுத்தம் ஜேம்ஸ் நகா், சந்தானம் நகா், வெங்கடேஷ்வரா நகா், புதுப்பட்டினம், சூரக்கோட்டை ஆகிய பகுதிகளில் வியாழக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.