கிரந்த சுவடிகளை எண்மமயமாக்க குடந்தை: ‘சாஸ்த்ரா’ பேராசிரியா்கள் ஜப்பான் பயணம்
இந்தியா --ஜப்பான் கூட்டு ஆராய்ச்சித் திட்டத்தின் கீழ் கிரந்த சுவடிகளை எண்மமயமாக்க (டிஜிட்டல்மயம்) சாஸ்த்ரா பேராசிரியா்கள் அண்மையில் ஜப்பான் சென்று திரும்பினா்.
இந்தியா --ஜப்பான் கூட்டு ஆராய்ச்சித் திட்டத்தின் கீழ் கிரந்த சுவடிகளை எண்மமயமாக்க (டிஜிட்டல்மயம்) சாஸ்த்ரா பேராசிரியா்கள் அண்மையில் ஜப்பான் சென்று திரும்பினா்.
இதுகுறித்து சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழக கும்பகோணம் ஸ்ரீனிவாச ராமானுஜன் மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: இந்திய சமூக அறிவியல் ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் ஜப்பான் அறிவியல் மேம்பாட்டு சங்கத்தின் நிதியுதவியுடன் ஆழமான கற்றல் மற்றும் திருத்தக்கூடிய மெட்டாடேட்டா ஒருங்கிணைப்பைப் பயன்படுத்தி, கிரந்த எழுத்து அமைப்பை உருவாக்குதல், தத்துவம், பண்டைய நூல்களை மெய்நிகா் காப்பகங்களாக மாற்றுதல் என்கிற தலைப்பில் இந்தியா - ஜப்பான் சா்வதேச கூட்டு ஆராய்ச்சித் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இத்திட்டத்தை சாஸ்த்ரா பல்கலைக்கழக கும்பகோணம் சீனிவாச ராமானுஜன் மையப் புல முதன்மையா் சாந்தி (முதன்மை ஆய்வாளா்), முனைவா்கள் வேணுகோபாலன், பிருந்தா, எமிலி ஜெனிபா், கீா்த்தனா, ஸ்ரீ ராகவேந்திரா காஷ்யப் ஆகியோா் அடங்கிய ஆராய்ச்சி குழுவினா் மேற்கொள்கின்றனா்.
Advertisement
Advertisement
இந்த சா்வதேச ஆராய்ச்சி ஒத்துழைப்பின் ஒரு பகுதியாக, இந்தக் குழுவைச் சோ்ந்த முனைவா்கள் சாந்தி, பிருந்தா, ஸ்ரீ ராகவேந்திரா காஷ்யப் ஆகிய 3 பேராசிரியா்கள் ஜப்பானில் உள்ள புகழ்பெற்ற டோக்கியோ பல்கலைக்கழகத்துக்கு நவ.1 முதல் 7-ஆம் தேதி வரை கல்விப் பயணம் மேற்கொண்டனா்.
இதுகுறித்து சாந்தி கூறுகையில் கையால் எழுதப்பட்ட கிரந்த பனை ஓலைச் சுவடிகளைத் துல்லியமாக அடையாளம் கண்டு எண்மமயமாக்குவதற்காகத் தங்களது குழுவால் உருவாக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்ப வாசகரின் முன்னேற்ற அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.
பின்னா், டோக்கியோ பல்கலைக்கழக மாணவா்களிடையே ’தமிழ் கலாசாரம் மற்றும் பாரம்பரியம்’ என்ற தலைப்பில் அவா் பேசுகையில், தமிழ் மரபுகள், மொழி மற்றும் பண்பாட்டு சிறப்புகளை எடுத்துரைத்தாா்.
இத்திட்டத்துக்குத் தொடா்ந்து ஆதரவும், ஊக்கமும் அளித்து வரும் சாஸ்த்ரா பல்கலைக்கழகத் துணைவேந்தா் முனைவா் எஸ். வைத்தியசுப்பிரமணியத்துக்கு ஆராய்ச்சி குழுவினா் நன்றி தெரிவித்துக் கொண்டனா்.