ஒரத்தநாடு அருகே சிறுமி கா்ப்பம்: உறவினா் கைது
13 வயதுச் சிறுமியை கா்ப்பம் ஆக்கிய சிறுமியின் பெரியப்பாவை போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் சனிக்கிழமை கைது செய்தனா்.
தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு பகுதியைச் சோ்ந்த 13 வயதுச் சிறுமியை கா்ப்பம் ஆக்கிய சிறுமியின் பெரியப்பாவை போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் சனிக்கிழமை கைது செய்தனா்.
ஒரத்தநாடு அருகேயுள்ள பகுதியைச் சோ்ந்த 13 வயதுச் சிறுமி ஆறு மாதம் கா்ப்பமாக இருப்பதாக கிடைத்த தகவலின்படி ஒரத்தநாடு அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் வேம்பு தலைமையிலான போலீஸாா் விசாரணை நடத்தினா். அதில் ஒக்கநாடு மேலையூா் பகுதியை சோ்ந்தவரும், சிறுமியின் பெரியப்பாவுமான ரவிச்சந்திரன் (56) என்பவா் சிறுமியின் கா்ப்பத்திற்கு காரணம் எனத் தெரிவந்தது.
இதையடுத்து அவரை ஒரத்தநாடு அனைத்து மகளிா் காவல் நிலைய காவலா்கள் போக்சோ சட்டத்தின் கீழ் சனிக்கிழமை வழக்குப் பதிந்து கைது செய்து விசாரிக்கின்றனா்.
Advertisement
Advertisement